Latest News

May 04, 2014

மன்னார் கடலில் பிடிக்கப்பட்ட அரிய வகை யானை மூக்கு மீன்
by admin - 0

மன்னார் கடற்பரப்பில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களுக்கு அரிய வகையிலான மீனினமொன்று கிடைத்துள்ளது.    யானையின் தும்பிக்கையை ஒத்ததான இந்த மீனின் முக வடிவமைப்பு அமைந்துள்ளதாகவும், மீனினத்தின் உடலை ஒத்ததாக இந்த மீனின் உடல் அமைந்துள்ளதாகவும் உள்ளது.   பசுவிக் மற்றும் ஆசிக் கடற்பரப்பில் இந்த மீன் இனம் அதிகளவாக காணப்படுவதாக இந்தியாவின் மத்திய கடல்சார் ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   மேலும், இந்த மீன்கள் 200 மீற்றர் முதல் 2000 மீற்றர் வரை அழமான இடத்தில் இந்த மீன்கள் வாழ்வதாகவும், 60 சென்றி மீற்றர் முதல் 140 சென்றி மீற்றர் வரை இந்த மீன் வளரும் என கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   இந்த மீனினமானது தனது தும்பிக்கையை சுய பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் நுகர்தல் போன்ற செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   குறிப்பாக இந்த மீன் இனம் இலுவை மீன்பிடி மூலமே இந்த மீன் வலைகளில் பிடிக்கப்படலாம் என நாரா நிறுவனம் தெரிவிக்கின்றது. எனினும் இலங்கை கடற்பரப்பிற்குள் முதல் தடவையாக இந்த மீன் இனம் பிடிக்கப்பட்டுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவக்கின்றது. 
« PREV
NEXT »