மலேஷியாவில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராயப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரை மலேஷிய அதிகாரிகள் அண்மையில் கைது செய்ததாக அறிவித்தனர்.
குறித்த மூவரது கைதுக்கான காரணம் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் யாந்தே ஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஆயுத போராட்டம், பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமான காரணிகளுக்காக நாட்டை விட்டு வெளியேறி புகலிடம் கோரும் நபர்களுக்கு புகலிடம் வழங்கப்பட வேண்டியது சர்வதேச நியதியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையாகவே புகலிடம் தேவையானர்களுக்கு புகலிடம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நோக்கங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்ட மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு புகலிடம் வழங்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அட்டைகளும் வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
Social Buttons