Latest News

May 30, 2014

ஐ.பி.சி தமிழ் வானொலியின் நினைவேந்தல் நிகழ்வு
by admin - 0

அனைவருக்கும் வணக்கம், தங்களது ஊடகத்தில் மற்றும் சமூக வலைதளங்களில் இச்செய்தியை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம். 


நன்றி.


ஐ.பி.சி தமிழ் வானொலியின் நினைவேந்தல் நிகழ்வு

உலகத்தமிழ் மக்களால் நன்கறியப்பட்ட ஐ.பி.சி (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) வானொலிக்காகப் பணியாற்றி உயிர் நீத்த ஊடகவியலாளர்கள், மற்றும் ஒலிபரப்பாளர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (31-05-2014) இடம்பெறவுள்ளது.

ஐ.பி.சி தமிழின் யாழ்ப்பாணச் செய்தியாளராகக் கடமையாற்றிய மயில்வாகனம் நிமலராஜன், மட்டக்களப்புச் செய்தியாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன், மாமனிதர் தராக்கி சிவராம், நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, மாமனிதர் என்.எஸ்.மூர்த்தி, ஒலிபரப்பாளர் கௌசி ரவிசங்கர் ஆகியோரது நினைவாகவே இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிகவும் கடினமான காலகட்டத்தில் ஐ.பி.சி தமிழிற்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் பணியாற்றியது மட்டுமன்றி, தாயக மக்களிற்காக அரும்பணியாற்றிய ஊடகர்களின் இந்த நினைவேந்தலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஐ.பி.சி தமிழ் வானொலி அழைப்பு விடுத்துள்ளது.

திகதி: 31-05-2014
நேரம்: மாலை 6:00 மணி
இடம்: St Andrew Roxburne Hall, 89 Malvern Avenue, Harrow, Middlesex, HA2 9ER

  IBC TAMIL 
117, Headstone Road,
Harrow London,
HA1 1PG


நன்றி ஈழம் ரஞ்சன் 
« PREV
NEXT »