Latest News

April 11, 2014

என்னோட ராசி நல்ல ராசி.. உற்சாக வைகோ....!
by admin - 0

என்னைப்  போய் ராசியில்லாதவர் என்று சொல்கிறார்கள். நான் சொல்கிறேன்... இப்போதும் நான் ராசியானவன்தான் என்று முழங்கியுள்ளார மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.தென்காசி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாருக்கு ஆதரவாக சங்கரன்கோவிலில் பேசினார் வைகோ. இன்று காலை நடந்த இந்தக் கூட்டத்தின்போது வைகோ பேசுகையில், எங்கள் வேட்பாளர் சதன்திருமலைக்குமார் ஏற்கனவே தொகுதிக்கு அறிமுகமானவர். உங்கள் சொந்த தொகுதியைச் சேர்ந்தவர். 

நான் வெற்றி பெறுவதைவிட வேட்பாளர் வெற்றிபெறுவதையே சிறந்ததாக கருதுகிறேன். ஈழப் பிரச்சனைக்கு முழுக் காரணமே காங்கிரஸ் கட்சி. நரேந்திரமோடி பிரமராக வந்தால் நன்மையில்லாவிட்டாலும், ஒரு சதவீதம் கூட தீமை வராது. சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும். என்னை எல்லோரும் ராசியில்லாதவர் என்று சொல்லுவார்கள். 

ஆனால் இப்போதும் நான் ராசியானவன் என்றார வைகோ.

« PREV
NEXT »