பாடசாலையில் இட நெருக்கடி நிலவுவதன் காரணமாக மாணவர்கள் மர நிழலில் ஒதுங்கி கல்வி கற்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி பூநகரி ஸ்ரீவிக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களே இத்தகைய இட நெருக்கடியிலும், கற்றல் செற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது மீள்குடியேற்றம் நடைபெற்ற பகுதியான பூநகரிப் பிரதேசத்தில் உள்ள இந்தப் பாடசாலை கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் தனது சொந்த இடத்தில் செயற்படத் தொடங்கியுள்ள நிலையிலும் மாணவர்களுக்குப் போதுமான வகுப்பறைகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. தற்போது இந்தப் பாடசாலையில் 425க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் மிக மோசமான இட நெருக்கடி காணப்படுகிறது. ஒரே ஒரு மாடிக் கட்டடத்தைக் கொண்ட குறித்த பாடசாலையின் மர நிழலின் கீழே அதிக வகுப்புக்கள் நடைபெறுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்திலேயே தற்போது மர நிழலின் கீழ் கூடுதலான வகுப்புகள் நடைபெறும் பாடசாலையாகவும் இது விளங்குகின்றது. தற்போது கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளின் போது சோர்வடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மழை காலத்தில் வகுப்புகள் நடத்தப்பட இயலாது மாணவர்கள் பெரும் இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களோ அல்லது கல்வித்திணைக்களமோ விரைவான நடவடிக்கையை மேற்கொண்டு பாடசாலையின் இட நெருக்கடியை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons