Latest News

April 02, 2014

புலிகளின் சாம்பலில் இருந்து மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் ஈழத்தில் விரைவில் ஆரம்பம் உறுதிப்படுத்தும் ஆங்கில செய்தி இதழ் ..!
by admin - 0

புலிகளின் சாம்பலில் இருந்து மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் ஈழத்தில் விரைவில் ஆரம்பம் உறுதிப்படுத்தும் ஆங்கில செய்தி இதழ் ..!

2007 மூன்றாம் மாதம் 26ஆம் நாள் கொழும்பில் உள்ள கட்டுநாயக்கா விமானப்படை தளத்தில் வான்புலிகள் தமது முதலாவது ஆகாயவழியிலான தாக்குதலை நடத்தினர்.
அதன்பின்னர் அவர்கள் சிங்கள இராணுவத்தின் பல இராணுவ இலக்குகளின் மீது தாக்குதலை நடத்தி இருந்தனர்.
2009 பிப்ரவரி 21ஆம் நாள் கொழும்பில் இறுதியாக நடத்திய வான்வெளி கரும்புலி தாக்குதலுடன் வான்புலிகளின் நடவடிக்கைகள் ஒரு தற்காலிக ஓய்வுக்கு வந்தது.
அதன் பின்னர் இரண்டு மாதங்களின் பின்னர் போர் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. இந்த நிலையினை ஓரளவுக்கு ஊகித்த புலிகளின் தலைமை இந்த இரண்டு மாதங்களுக்குள் தமது விமானங்களை பாகம் பாகங்களாக பிரித்து சில ஆயிரம் போராளிகளுடன் பாதுகாப்பாக வேறு ஒரு இடத்துக்கு நகர்த்தி விட்டனர் .
அவர்களுடன் சில முக்கிய இராணுவ ஆவணங்கள், பல இலகு ரக மற்றும் கனரக ஆயுதங்கள், மற்றும் முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்ற தெளிவான திட்டம் என்று ஒரு முழுமையான முன்னேற்பாடுடன் அன்று நகர்ந்த அந்த பிரிவு பாதுகாப்பான இடத்துக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகின.
அவ்வாறு நகர்ந்த பிரிவுடன் பின்னர், முள்ளிவாய்க்காலில் இராணுவத்தின் முற்றுகையை ஊடறுத்து வெளியேறிய போராளிகள் மற்றும் சில தளபதிகளும் இணைந்து கொண்டாதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் கூறுகின்றன.
அவ்வாறு ஒன்றிணைந்த போராளிகளுக்கு தலமையில் இருந்த கிடைத்த கட்டளையின் படி தமக்குரிய இராணுவ நடவடிக்கைகள் அல்லாத பிற உள்ளக நடவடிக்கைளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர் என்றும் அவர்களின் தொடர்ச்சியாக புலிகளின் இராணுவப் பிரிவு களம் இறங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை எப்படியோ உளவறிந்த வெளிநாட்டு ஊடகம் ஒன்று புலிகளின் சாம்பலில் இருந்து இன்னொரு ஆயுத போராட்டம் விரைவில் ஆரம்பமாக உள்ளது என்று நேற்று செய்தி வெளியிட்டது.
வழக்கம் போல இலங்கை அரசும் இதை மறுத்தது. ஆனால் இந்த முறை புலிகள் கண்டிப்பாக வரமாட்டார்கள் என்று உறுதியாக சொல்லாமல், புலிகள் பழைய இராணுவ பலத்துடன் வரமாட்டார்கள் என்று கூறி உள்ளது.
இவ்வளவு நாளும் புலிகள் வரவே மாட்டார்கள் என்றார்கள்..... இப்போது வருவார்கள் ஆனால் பலத்துடன் வர மாட்டார்கள் என்கிறார்கள். இதில் இருந்தே புலிகளின் மீள் வருகை உறுதிபடுகின்றது.
ஆமாம்.
யார் என்ன சொன்னாலும் புலிகள் கண்டிப்பாக வருவார்கள்....
ஏனெனில் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்பது தமிழர்களின் விருப்பம் மட்டுமல்ல....
அது காலத்தின் கட்டாயம்
« PREV
NEXT »