இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல் ஒன்று கருப்புப் பெட்டியில் இருந்து வந்த ஒலியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370 தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்தது. அதை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் நாளை முடிவடைகிறது. இதையடுத்து அதில் இருந்து வரும் ஒலி நாளை முதல் மெல்ல மெல்ல குறையத் துவங்கி வரும் 12ம் தேதி முழுவதுமாக நின்றுவிடும். அதனால் அதற்குள் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க வேண்டும்
தேடல் பணியில் ஈடுபட்டுள்ள சீன கப்பலான ஹைசுன் 01 கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் கருவியை பயன்படுத்தி விமானத்தை தேடி வருகிறது. அந்த கருவி கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டுபிடித்துள்ளது.
சீன கப்பல் கண்டுபிடித்துள்ள ஒலியின் அளவு விமானத்தின் கருப்புப் பெட்டிகளில் இருந்து வரும் ஒலியின் அளவோடு ஒத்துப் போகிறது என்று மலேசிய விமான போக்குவரத்து துறை தலைவர் அசாருத்தீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விமான தேடலில் ஈடுபட்டுள்ள சீன ராணுவ விமானம் ஒன்று நேற்று தெற்கு இந்திய பெருங்கடலில் வெள்ளை நிறத்தில் பொருட்கள் மிதப்பதை கண்டுள்ளது. இந்த பொருட்கள் ஒலி வந்த இடத்திற்கு அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீன கப்பல் ஒலியை கண்டுபிடித்துள்ள இடத்தில் கூடுதல் விமானங்களை தேடும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக ஆஸ்திரேலிய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Social Buttons