Latest News

April 29, 2014

நோர்வே காவற்துறையினர் நெடியவனைத் தேடுவதாக, இலங்கை தெரிவிப்பு!
by Unknown - 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைவர் என்று கூறப்படும் நெடியவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நோர்வேயின் காவற்துறையினர் மேற்கொண்டிருப்பதாக இலங்கை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெடியவன் இன்னடர்போலினால் தேடப்படுபவர்களின் பட்டியலில் கடந்த வாரம் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் நோர்வேயில் இருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவரைக் கைது செய்யும் நோக்குடன், நோர்வே காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »