Latest News

April 28, 2014

இலங்கையில் போதைப் பழக்கத்தால் வருடாந்தம் 2,80,000 பேர் உயிரிழப்பு !
by Unknown - 0

இலங்கையில் வருடமொன்றுக்கு புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை காரணமாக  2 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் புகைப்பிடித்தலால் மாத்திரம் நாளொன்றுக்கு 65 பேர் உயிரிழப்பதுடன் வருடமொன்றுக்கு 21 ஆயிரம் ஆக விளங்குவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

 இவ்வாறான நிலையில் போதையற்ற சமூகம் 2014 என்ற தேசிய வேலைத் திட்டத்தைச் சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 1200 பேர் பிறக்கின்றார்கள். சுமார் 1000 பேர் உயிரிழக்கின்றார்கள். உயிரிழப்பவர்களில் 60 வீதமானோர் அல்லது சுமார் 600 பேர் தொற்றா நோய்களாலேயே உயிரிழக்கின்றனர். தொற்றா நோய்களால் உயிரிழப்பவர்களில் 70 வீதமானோரின் மரணத்திற்கு புகைப்பிடித்தலும், மதுப்பாவனையுமே காரணமாக அமைந்துள்ளது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
« PREV
NEXT »