Latest News

April 08, 2014

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐம்பது பேர் கைது
by admin - 0

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐம்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்யும் நோக்கில் செயற்பட்டதாக குறித்த ஐம்பது பேர் மீதும் பயங்கரவாத தடைப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.
இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு படையினரிடம் சரணடையாத முன்னாள் உறுப்பினர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே தடவையில் பாரியளவில் நாளை வேலைகளில் ஈடுபடும் நோக்கில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறையில் ஐந்து மீனவர்கள் கைது
யாழ். வடமராட்சி, பருத்தித்துறை முனையில் கடலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தமிழ் மீனவர்கள் ஐந்து பேர் சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தமிழர் தாயக பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தின் மிலேச்சத்தனமான அடாவடி, கைதுகள், கடத்தல்கள் என்பன வகை தொகையாக நடைபெறுவது யாவரும் அறிந்த விடயம்.
அதன் தொடர்ச்சியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் கடற்கரையில் வைத்து கடற்தொழிலுக்கு சென்று விட்டு கரைதிரும்பிய மீனவர்களான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான மோ.வின்சன் மரியதாஸ்(42) , நான்கு பிள்ளைகளின் தந்தையான பத்திநாதன் ரெஜினோல்ட் (40), நான்கு பிள்ளைகளின் தந்தையான மிக்கேல்பிள்ளை (45) , ஐந்து பிள்ளைகளின் தந்தையான பாபு (44), மூன்று பிள்ளைகளின் தந்தையான ராஜா (30) என்ற ஐவரையும், கரையில் காத்துநின்ற சிறிலங்கா பயங்கரவாத புலனாய்வாளர்களும், காவற்துறையினரும் கைது செய்து பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
பின்பு அங்கிருந்து அவர்களை வவுனியாவுக்கு கொண்டுசென்று தடுத்து வைத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாயக பகுதிகளில் அப்பாவி குடும்பங்கள் தமது அன்றாடம் தொழிலுக்கு சென்றுவிட்டு வந்தாலும் அவர்கள் குடும்பஸ்தர்கள் என்றும் பாராது கண்மூடித்தனமாக அவர்களை கைது செய்தது அப்பகுதி மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
« PREV
NEXT »