Latest News

April 28, 2014

வரிக்குதிரைக்கும் கழுதைக்கும் பிறந்த விநோத குட்டி
by admin - 0

மெக்ஸிகோவிலுள்ள ரேனோஸா மிருகக் காட்சி சாலையில் வரிக்குதிரையொன்றுக்கும் கழுதையொன்றுக்கும் இடையே இடம்பெற்ற அரிய இனக் கலவி மூலம் கழுதை போன்ற உடலையும் வரிக்குதிரை போன்ற கால்களையும் கொண்ட விநோத குட்டியொன்று பிறந்துள்ளது. ரேயஸ் என்ற பெண் வரிக்குதிரைக்கும் அருகிலிருந்த பண்ணையொன்றைச் சேர்ந்த இக்னேசிபோ என்ற கழுதைக்குமிடையில் ஏற்பட்ட இனக் கலவி மூலம் பிறந்த குட்டிக்கு கும்பா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் இத்தாலியில் வரிக்குதிரைக்கும் கழுதைக்கும் இடையிலான இனக்கலவி மூலம் குட்டி ஒன்று பிறந்தமை உலகளாவிய ரீதியில் பரபரப்பாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






« PREV
NEXT »