Latest News

April 26, 2014

யுத்த காலங்களில் பாலியல் வல்லுறவை ஆயுதமாகக் கையாளும் நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் இணைப்பு!
by admin - 0

யுத்தம் காலத்தில் பாலியல் வல்லுறவுகளை ஆயுதமாக கையாண்ட நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் இணைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் பாலியல் வல்லுறவுகளை ஆயுதமாகப் பயன்படுத்தும் 21 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதில் சிறீலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறைகள் தொடர்பாக ஆராயும் ஐ.நா. பொதுசெயலாளரின் சிறப்புப் பிரதிநிதி சான்னாப் ஹவா பங்குரா நியூயோர்க்கில் வைத்து இந்த அறிக்கை தொடர்பாக அறிவிப்பை மேற்கொண்டார்.

யுத்தம் நடைபெறும் நாடுகளில் மிகவும் மோசமான முறையில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஆண்களும் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிடப்பட்டுள்ளது.

« PREV
NEXT »