Latest News

April 22, 2014

ரி.ஐ.டி யினரால் ஒருவர் கைது
by admin - 0

பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கோப்பாய் பகுதியினைச் சேர்ந்த இராஜரட்ணம் சுதர்சன் (30) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தனர். 

மானிப்பாய் வீதியில் கணினி வலைப்பின்னல் என்னும் நிலையத்தினை நடத்தி வந்த இவர், விடுதலைப்புலிகள் சார்பான துண்டுப் பிரசுரங்களை தனது கணினியில் தட்டச்சுச் செய்து அச்சிட்டு வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அத்துடன், இவரது நிலையத்திலிருந்த கணினிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை முத்திரையிட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் கொழும்பு தகவல் திணைக்கள பிரிவினர் கொண்டு சென்றுள்ளனர். 

முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான இவர் யுத்தத்தில் ஒரு காலை இழந்திருந்த நிலையில் மேற்படி நிலையத்தினை நடத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »