Latest News

April 26, 2014

மே-17 லண்டனில் சிறிலங்கா புறக்கணிப்பு மாநாடு : ஆய்வுக் கட்டுரைகள் கோரல் !
by admin - 0

அனைத்துலக அரங்கில் சிறிலங்காவை தனிமைப்படுத்தவும், அதன் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்தவும் கூடியதான “SAY NO TO SRI LANAKA” எனும் சிறிலங்கா புறக்கணிப்பு செயல்முனைப்பு மாநாட்டுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆய்வுக்கட்டுரைகளுக்கு கோரல் விடுத்துள்ளது.
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை நினைவேந்தும் அதன் நினைவேந்தல் வாரத்தின் மே-17ம் நாள் சனிக்கிழமை மாநாடு பிரித்தானியத் தலைநகர் லண்டனில் இடம்பெறுகின்றது.
‘சிறிலங்காவைப் புறக்கணிப்போம் ‘ எனும் இச்செயல்முனைப்பினை, பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியாகவும், இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதுமையான அரசியல், சட்டவியல் ரீதியான தந்திரோ பாயங்களைக் கண்டறிவதற்காகவும் இந்த மாநாடு இடம்பெறுகின்றது.
இந்த மாநாட்டினை மையப்படுத்தி ஆய்வுக்கட்டுரைகளை உலகம் தழுவியிரீதியில் கோரியிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஆய்வுகளின் ஆளுமைகளை கவனத்தில் கொண்டு மாநாட்டில் நேரடியாக சமர்பிப்பதற்கும் வழியிட்டுள்ளது.
பிரதமர் பணியக pmo@tgte.org இந்த மின்னஞ்சல் ஊடாக இது தொடர்பிலான மேலதிக விபரங்களையோ அல்லது ஆய்வுகளை சமர்பிக்கவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »