Latest News

April 20, 2014

குடத்தனை மணக்காடு பகுதியில் உள்ள சவுக்கங்காட்டினுள் தீ வைப்பு நடவடிக்கை தேவை -சுகிர்தன்
by admin - 0

குடத்தனை மணக்காடு பகுதியில் உள்ள சவுக்கங்காட்டினுள் கடந்த 17/04/2014 அன்று இனந் தெரியாதவர்களால் தீ வைக்கபடுள்ளது. இவ் இடத்தினை மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூ. சஞ்சீவன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் கருத்து தெரிவிக்கையில் .






குடத்தனை மணக்காடு பகுதியில் உள்ள சவுக்கங்காட்டினுள் கடந்த 17/04/2014 அன்று இனந் தெரியாதவர்களால் தீ வைக்கபடுள்ளது இத் தீயினால் சுமார் 5 ஏக்கர் அளவில்  உள்ள சவுக்கமரம் தீக்கிரையானது. மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் துணிச்சல் மிக்க செயற்பாட்டினால் தீயானது கட்டுபாட்டுக்குள் வந்தது. இது சம்மந்தமாக எமது விவசாய அமைசரிடம் தெரிவித்துள்ளேன் அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சவுக்கங்காடு ஆனது 2006 பின்னர் இன்று வரை எவரும் கவனிக்காது கைவிட பட்ட நிலையில் காணப்டுகின்றது பல ஏக்கர் சவுக்கு மரமானது மக்களால் களவாக விறகுக்கு வெட்டி செல்லபட்டுள்ளது. வடமாரட்சி கிழக்கு பகுதியினை இயற்கை அழிவில் இருந்து பாதுகாப்பது மணல் திட்டுகள் மற்றும் சவுக்கங்காடுகளே. அனால் இவை இரண்டும் தற்போது மிக வேகமாக அழிக்கபட்டு வருகின்றது. இதனை தடுத்து நிறுத்த சம்மந்தபட்ட அனைவரும் முன் வரவேண்டும் தவறும் பட்சத்தில் காலபோக்கில் இப் பிரதேசமானது முற்றாக அழிந்து போகும் என்பதில் இந்த மற்று கருத்துக்கும் இடமில்லை. என்று தெரிவித்தார்.
« PREV
NEXT »