Latest News

March 14, 2014

உண்மையில் புலிகளின் உறுப்பினர் ஒருவர் துப்பாக்கியோடு அலைகிறாரா?
by admin - 0

கிளிநொச்சியில் விஸ்வமடு மற்றும் தருமபுரத்திற்கு இடையே உள்ள பகுதியில் ஒரு வீட்டை நேற்றைய தினம்(13) பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து சுற்றிவளைத்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் ஒருவர், இலங்கை புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவரை காலில் சுட்டு விட்டு தப்பிவிட்டதாக பொலிசாரும் இராணுவத்தினரும் தெரிவித்துள்ளார்கள். இதற்கு பின்னால் என்ன நடந்தது ? உண்மையில் புலிகளின் உறுப்பினர் ஒருவர் துப்பாக்கியோடு அலைகிறாரா ? இலங்கை அரசு ஏன் இப்படி ஒரு கதையை வெளியிட்டுள்ளது ? வாருங்கள் விரிவான செய்திக்குச் செல்லலாம் !

கிளிநொச்சியில் ஜெயக்குமாரி என்னும் பெண் கணவனை இழந்த நிலையில், வசித்து வருகிறார். இவரின் மகன் ஒருவர் போராட்டத்தில் இணைந்து பின்னர் கொல்லப்பட்டார். மேலும் 2 ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவருமே காணாமல்போய்விட்டார்கள். இந்நிலையில் ஜெயக்குமாரியும் அவரது 13 வயது மகளும் இணைந்து காணாமல்போன இருவரையும் கண்டுபிடித்து தருமாறு போராடி வருகிறார்கள். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை சென்றவேளை குறித்த இந்த இளம்பெண் அழுது பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, கமரூனின் கவனத்தை ஈர்ந்தார். அத்தோடு நவிப்பிள்ளை சென்றபோதும் இதே பெண்மணி மற்றும் அவரது மகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் இலங்கை புலனாய்வு அதிகாரிகள் இவர்கள் மீது கண்வைத்துள்ளார்கள்.

மேலும் நேற்றைய தினம், கஜீபன் என்னும் ஒரு தமிழரை புலனாய்வுப் பொலிசார் தேடிவருவதாக சிங்கள ஊடகங்கள் செய்தி ஒன்றை வெளியிட்டார்கள். அத்தோடு கஜீபனின் தங்கை(கர்பிணியாக உள்ளார்) அவரையும் பொலிசார் கைதுசெய்து 4ம் மாடிகொண்டுசென்றுவிட்டார்கள். இன் நிலையில், நேற்றைய தினம் மாலை ஜெயக்குமாரியின் வீட்டை பல நூறு இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து சுற்றிவளைத்துள்ளார்கள். இதற்கு முன்னதாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெயக்குமாரியின் வீட்டுக்குள் சிலர்செல்ல முற்பட்டுள்ளார்கள். இதனை அயலவர்கள் தடுத்துவிட்டார்கள். மாலைப்பொழுது ஆனதும் அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. தாம் ஜெயக்குமாரியின் வீட்டுக்குள் , செல்ல முற்பட்டபோது தனது காலில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஒருவர் தப்பிச் சென்றுவிட்டதாக புலனாய்வுப் பிரிவினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

இதன் அடிப்படையிலேயே மேலதிகப் பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கே குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஜெயக்குமாரியின் வீட்டில் புலிகள் உறுப்பினர் ஒருவர் ஒளிந்து இருந்ததாகவும் அவரைக் கைதுசெய்யவே தாம் சென்றதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு ஜெயக்குமாரியின் வீட்டில் இருந்து துப்பாக்கி ஒன்றையும் தாம் கைப்பற்றியுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் அப்படி உண்மையாகவே அங்கே இருந்திருந்தால், அவர் இலங்கை புலனாய்வு அதிகாரிகளின் காலில் சுட்டு இருக்கமாட்டார். நேராக நெற்றியில் தான் வெடிவைத்து இருந்திருப்பார். இது அனைவருக்கும் புரியும். இலங்கை புலனாய்வுப் பிரிவினர் வேண்டும் என்றே இவ்வாறு ஒரு கதையைக் கட்டி, ஜெயக்குமாரியின் வாயை அடைக்க திட்டம் தீட்டியுள்ளார்கள். அத்தோடு அவரது குரல் சர்வதேசத்திற்கு இந்த காலகட்டத்தில் சென்றுவிடக்கூடாது என்பது தான் அவர்களின் பிரதான நோக்கமாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் இது ஒரு சோடிக்கப்பட்ட கட்டுக்கதை ஆகும். அத்தோடு புலிகள் இன்னும் ஆயுதங்களோடு இருக்கிறார்கள் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தவே இலங்கை அரசு இவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Sinhala News: Police search operations are being carried out with the assistance of the Army in the Kilinochchci area to arrest a suspect who has escaped after shooting one of the police officers today, police said. The suspect, who is believed to be an ex-LTTEr, had aimed gunfire at the police officer when a police team from Colombo attempted to arrest the suspect over a case. Sources said some weapons were recovered from the location where the suspect had stayed in Dharmapuram, Kilinochchi.

« PREV
NEXT »

No comments