வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன்
தலைமையில் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நடமாடும்
சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், திருமணப்பதிவுச் சான்றிதழ்களுக்கான
விண்ணப்பம், புதிய மற்றும் காணமல் போன தேசிய அடையாள அட்டைக்கான
விண்ணப்பம், காணிப் பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகள் ஆகியவை இங்கு
ஏற்றுக்கொள்ளப்பட்டன. அத்துடன், பொலிஸ் முறைப்பாடுகளும் பெறப்பட்டதுடன்,
சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்நடமாடும் சேவையில் வவுனியா வடக்கு
பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 20 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள்
நன்மையடைந்தனர்.
விண்ணப்பங்களுக்கான முத்திரைக் கட்டணம், அடையாள
அட்டைக்கான புகைப்படம் என்பற்றை சர்வோதய நீதிச் சேவைகள் இயக்க
நிதியுதவியில் இலவசமாக வழங்கப்பட்டன.
No comments
Post a Comment