Latest News

March 11, 2014

பூமியில் 126 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதலை இனம் கண்டுபிடிப்பு
by admin - 0

பூமியில் 126 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய வகை சின்னஞ் சிறிய முதலை இன விலங்கின் எச்சங்கள் பிரித்தானிய வைட் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி முதலை இன பிராணியானது இரு வேறு பாகங்கள் வௌ;வேறு ஆய்வாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டன.

அந்த பிராணியின் மண்டையோட்டின் பின் அரைப்பகுதி  வைட் தீவில் சாள்ட்டவுன் எனும் இடத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் டியனி திரேவர்தன்  என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


அதன் பின் மூன்று மாதம் கழித்து அதே பிரதேசத்தில் ஆஸ்ரின் மற்றும் பின்லி நாதன் ஆகியோர் மேற்படி முதலை இன விலங்குகளினது மண்டையோட்டின் பிறிதொரு பகுதியை கண்டுபிடித்தனர்.

இந்த எச்சங்களை ஆய்வுக்குட்படுத்திய ஆய்வாளர்கள், அந்த முதலை இன விலங்கு மூக்கிலிருந்து வால் வரை 2 அடி நீளத்தை மட்டுமே கொண்டிருந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments