Latest News

March 16, 2014

இருளில் ஒளிரும் கன்னி மரியாள்
by admin - 0

தென்பெல்ஜியத்திலுள்ள வீடொன்றிலுள்ள  கன்னி மரியாள்  உருவச்சிலை  இரவு நேரத்தில்  ஒளிர்வதாக   அங்கிருந்து வரும் செய்திகள்  தெரிவிக்கின்றன. ஜல்கே நகரிலுள்ள  வீடொன்றிலுள்ள மேற்படி  உருவச்சிலை  ஒளிர்வது தொடர்பான  செய்தி  பரவியதை  அடுத்து  நூற்றுக்கணக்கான மக்கள்  அந்த வீட்டை  முற்றுகையிட்டுள்ளனர். 

 
இந்நிலையில்  உள்ளூர்  கத்தோலிக்க  சபையானது இந்த  உருவச்சிலை  ஒளிர்வது  தொடர்பில்  பரீசிலித்தறிய மதகுருமார்  குழுவொன்றை அங்கு  அனுப்பி  வைத்துள்ளது. 
 
அந்த சிலையை பரிசோதித்த  அவர்கள் அது  ஒளிர்வது  இயற்கையானதா  அல்லது  அற்புத  செயலா  என்பது  தொடர்பில்  கருத்து  எதனையும்  வெளியிட  மறுத்துள்ளது. 

« PREV
NEXT »