Latest News

March 16, 2014

9/11 போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தல்?
by admin - 0

மாயமான மலேசிய விமானத்தை கடத்தி 9/11 தாக்குதல் போன்று இந்தியாவை தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கடந்த சனிக்கிழமை கிளம்பிய விமானம் மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது



சீனா 10 செயற்கைக்கோள்களை விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்தியாவும் தனது கடற்படையை தேடல் வேட்டையில் இறக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று இத்தனை நாட்கள் கூறப்பட்டது. ஆனால் தற்போது விமானம் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்நிலையில் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரும், முன்னாள் அமெரிக்க துணை செயலாளருமான ஸ்ட்ரோப் டால்பாட் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 9/11 தாக்குதல் போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »