Latest News

March 24, 2014

பரந்தனில் மீட்கப்பட்ட சடலம் கோபியினுடையதா? தாயும் ரி.ஐ.டியால் கைது
by admin - 0

பரந்தன் புகையிரதப் பாதையோரம் மீட்டெடுக்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் அதனை விரைந்து அரச செலவில் அடக்கம் செய்ய வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் அடையாளம் காணப்படாத சடலங்கள் இருவாரங்கள் கடந்தும் உரிமை கோரப்படாவிட்டால் அதன் பின்னரே உரிய நீதிமன்ற அனுமதி பெற்றப்பட்டு அரச செலவில் புதைக்கப்படுவது வழமையாகும். எனினும் குறித்த சடலத்தை அடையாளம் காட்டுவதில் காட்டப்பட்டுவரும் முனைப்பு சந்தேகத்தினை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. குறித்த சடலம் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரினதென காட்ட முயற்சிகள் தொடர்கின்றன. எனினும் கழுத்து வெட்டிபடுகொலை செய்யப்பட்ட பின்னர் புகையிரத விபத்தினில் உயிரிழந்தது போன்று காண்பிக்க சடலம் புகையிரத ஓடுபாதையில் வீசப்பட்டுள்ளது. எனினும் புகையிரதம் அவரது கால்களினை மட்டுமே துண்டித்து சென்றதால் கழுத்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்டமை அம்பலமாகியிருந்தது. சடலம் வீசப்பட்டிருந்த இடத்திற்கு அண்மித்ததாகவே படைத்தரப்பின் பரந்தன் படைதளமும் அமைந்துள்ளது. இதனிடையே குறித்த சடலம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் தேடப்பட்டு வருவதாக காண்பிக்கப்படும் சந்தேக நபரான பொன்னையா செல்வநாயகம் கஜீபன் எனப்படும் கோபியினதேயென வன்னி செய்திகள் சில தெரிவிக்கின்றன. எனினும் அதனை உறுதிப்படுத்தாத நிலை தொடர்கின்ற நிலையில் தனது ஜெனீவா நாடகத்திற்காக இல்லாத கோபியைத் தேடுவதாகவும் அத்தரப்புக்கள் கூறுகின்றன. இதனிடையே கோபியின் தாயாரைப் பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(23) கிளிநொச்சியில் வைத்து கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. பயங்கரவாதக் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்து கொழும்புக்கு கொண்ட சென்றுள்ளதாகவும் அவரிடம் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கினறன.
« PREV
NEXT »

No comments