Latest News

March 05, 2014

கோச்சடையான் பாடல்கள்
by admin - 0

மார்ச் 9-ஆம் தேதிக்காக ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, வாலி ஆகியோரின் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். சௌந்தர்யா அஷ்வின் இயக்கியுள்ள கோச்சடையான் திரைப்படத்தின் பாடல்கள் மார்ச் 9-ஆம் தேதி சத்யம் திரையரங்கில் ரிலீஸாகிறது.



கோச்சடையான் திரைப்படத்தில் ரஜினி நடித்தது மட்டுமல்லாமல் ஒரு பாடலும் பாடியிருப்பதால் ரஜினியின் ரசிகர்கள் பாடல்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். கோச்சடையான் திரைப்படத்திற்காக வைரமுத்து எழுதிய வரிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் 9 பாடல்களை கேட்க ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வைரமுத்துவின் ரசிகர்களும் காத்துக்கிடக்கின்றனர். மேலும் வாலி அவர்கள் கடசியாக எழுதிய சில பாடல்களில் ஒரு பாடல் கோச்சடையான் திரைப்படத்திலும் இடம்பெற்றிருப்பதால் வாலி ரசிகர்களும் பாடல்களுக்காக காத்திருக்கின்றனர்.

கோச்சடையான் பாடல்கள் :

# எங்கே போகுதோ வானம்
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள் : வைரமுத்து

# மெதுவாகத்தான்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாதனா சர்கம்
பாடல் வரிகள் : வாலி

# மாற்றம் ஒன்றுதான் மாறாதது
பாடியவர்கள் : ரஜினிகாந்த், ஹரிசரன், உமா ஷங்கர்(ஜதி)

# மணப்பெண்ணின் சத்தியம் 
பாடியவர் : லதா ரஜினிகாந்த்
பாடல் வரிகள் : வைரமுத்து

# இதயம்
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், சின்மயி
பாடல் வரிகள் : வைரமுத்து

# எங்கள் கோச்சடையான்...
பாடியவர்கள் : குழு
பாடல் வரிகள் : வைரமுத்து

# மணமகனின் சத்தியம்
பாடியவர் : ஹரிசரன்
பாடல் வரிகள் : வைரமுத்து

# ராணாவின் கனவு
லண்டன் இசைக் குழு

# கர்ம வீரன்
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.ரிஹானா
பாடல் வரிகள் : வைரமுத்து

« PREV
NEXT »

No comments