Latest News

March 06, 2014

சர்வதேச விசாரணைக்கு ஆதரவு வழங்கப்படும்!- பிரித்தானியா
by Unknown - 0

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரித்தானியா தொடர்ந்தும் இருந்து வருவதாகவும் இந்த செய்தி ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்படும் எனவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பதால், ஜெனிவாவில் அமெரிக்க முன்வைத்துள்ள வரைவு தீர்மானம் குறித்து சில தமிழ் குழுக்கள் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.
எனினும் கொழும்பு ஊடகம் ஒன்றின் டுவிட்டர் கேள்விக்கு பதிலளித்துள்ள பிரித்தானிய அமைச்சர் ஹ்யூகோ ஸ்வயர், சர்வதேச விசாரணைக்கு தமது அரசாங்கம் ஆதரவு வழங்கும் என கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே அமெரிக்க தலைமையிலான இந்த யோசனை ஜெனிவாவில் கொண்டு வரப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஒரு நம்பகமான விசாரணையை நடத்தவில்லை என்பதால், சர்வதேச விசாரணை ஒன்று தற்போது தேவைப்படுகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு இலங்கையில் தற்போதைய மனித உரிமை தொடர்பில் கவனம் செலுத்தி ஒரு சர்வதேச விசாரணைக்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் என எண்ணுகி்றேன் என ஸ்வயர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் தலைமையில் மோதல்களில் ஈடுபட்ட இருத்தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் அணுசரனையில் ஐ.நா மனிதம உரிமை ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட்டுள்ள கடினமான மூன்றாவது வரைவு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, மொண்டிநீக்ரோ, மெசிடோனியா, மொரீசியஸ் ஆகிய நாடுகளினால் இந்த வரை யோசனை விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் நோக்கிய முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ய தேசிய செயல்முறை மற்றும் இருத்தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் அதனுடன் சம்பந்தப்பட்ட குற்றங்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளை மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் கண்காணிக்க வேண்டும் எனவும் அந்த தீரமானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments