எதிர்வரும் திங்கட்கிழமை 10-ஆம் திகதி இலண்டன் மல்பரோ-ஹவுசில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள உள்ளதாகவும் அவரது பிரயாண ஏற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது.
53 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் குறித்த மாநாட்டில் இலங்கை அதிபர் பங்கு கொள்ளும் பட்சத்தில் மாநாடு நடைபெற உள்ள லண்டன் மல்பரோ – ஹவுசின் முன்னிலையில் தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான தமிழர்களின் கண்டனக் குரலை எழுப்புவதற்கு அனைவரையும் தயாராகுமாறு பிரித்தானியர் தமிழர் பேரவை அறிவிப்பு விடுத்துள்ளது. இலங்கை அதிபரின் விஜயம் குறித்த தகவல் உறுதிப்பட கிடைக்கப் பெற்றவுடன் அனைவருக்கும் உடனடியாக அறியத் தரப்படும்.
No comments
Post a Comment