காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும், 3வது அணி உருவானால் அதை வரவேற்று பிரசாரம் செய்வோம் என்றும் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு நினைவு பொதுகூட்டம் நேற்று கோபியில் நடந்தது.

அந்த நிகழ்ச்சிக்கு பின் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நிருபர்களிடம் பேசும்போது, ''கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்தோம்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையப்போவதால் அக்கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ய போவதில்லை.
அரசியலில் ஜாதி, மதம் இருக்கக்கூடாது. அதனால், காங்கிரசும், பா.ஜனதாவும் ஆட்சிக்கு வரக்கூடாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி உருவானால் அதை வரவேற்று பிரசாரம் செய்வோம்.
எரிவாயு குழாய்களை கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள். கேரளாவை போல் நெடுஞ்சாலை வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்ல வேண்டும்.

ஆம் ஆத்மி கட்சியும் தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்தும் ஊழலை எதிர்ப்போம் என்று கூறி வருகிறார்கள். ஆனால், அந்த கட்சிகளுக்குள் பல பிரச்சினைகள் உள்ளது. அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்" என்று கூறினார்.
No comments
Post a Comment