Latest News

February 03, 2014

மனிதப் புதைகுழியை மறைக்க அதன் மேல் விகாரையா? வெளிச்சத்தில்
by admin - 0

சர்ச்சைக்குரிய மனித புதைகுழி இருந்த இடத்தில் விகாரைக்காக ஒதுக்கப்பட்டது என ஒரு பதாதை இக்காணிக்கருகில் இருந்துள்ளது. அதனால் குறித்த புதைகுழியை மறைப்பதற்காக விகாரையை இதில் கட்டும் திட்டம் இருந்திருக்கலாமென ஊகங்கள் வெளியாகியுள்ளது.
அவ்வகையில் மனிதப் புதைகுழிகளைப் மறைப்பதற்காகவே விகாரைகள் கட்டப்படுகின்றன என்றால் வடகிழக்கில் அண்மையில் கட்டப்பட்ட அனைத்து விகாரைகளுக்குக் கீழும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
மன்னார் புதைகுழிக்கு அருகில் உள்ள கிராமங்களில் வழமையாக வந்து மிரட்டுபவர்கள் அவ்வூர்காரர்களிடம் இந்த இடத்தில் தாங்கள் முன்னர் பயன்படுத்தி மயானம் ஒன்றிருந்ததாக வாக்குமூலமளிக்குமாறு தொடர்ந்தும் மிரட்டிவருவதாக அப்பகுதி மக்கள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments