Latest News

February 22, 2014

போர் தவிர்ப்பு வலயம் இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது!- கெலும் மக்ரே
by admin - 0

சனல் 4 தொலைக்காட்சியின் போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை இந்திய மற்றும் மலேசியர்களுக்காக நாளைய தினம் இணையத்தளம் ஊடாக இலவசமாக ஒளிப்பரப்ப உள்ளதாக அந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆவணப்படத்தை காண்பிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை இந்தியா இன்று நிராகரித்தது.
இதனையடுத்தே இணையத்தளம் வழியாக போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை ஒளிபரப்ப மக்ரே தீர்மானித்ததாக மலேசிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்களை கவனத்தில் கொண்டு தான் இந்த ஆவணப்படத்தை தயாரித்ததாக கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.
இலங்கை, மலேசியா, நேபாளம் ஆகிய நாடுகள் இந்த ஆவணப்படத்தை தமது நாடுகளில் திரையிட்டு காண்பிக்க இதற்கு முன்னர் தடைவிதித்திருந்தன.
« PREV
NEXT »

No comments