தமிழ் மக்களின் உரிமைக்குரல்களை நசுக்குவதில் சிறிலங்கா இராணுவத்தினர் நேரடியாகவே களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதனைத்தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு காணப்பட வேண்டுமானால் சர்வதேசம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் நேரடியாக தலையிடும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை யாழ்.முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அதே போன்று நேற்று இருந்து வலி.வடக்கில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழுகின்ற மக்கள் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தும், அந்த மக்களை தடுக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் முகாங்களில் தலைவரை அச்சுறுத்தி, அவரையும் இராணுவத்தினர் தம்முடன் அழைத்துச் சென்று கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். இதனால் முகாம்களில் வாழுகின்ற மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இன்று தமிழர் தாயகத்தில் இருக்கின்ற நிலமை இதுதான். ஜநனாயக ரீதியாக எந்தவிதமான வன்செயலும் இல்லாமல், மக்கள் தமக்கு இருக்கின்ற பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருகின்ற வகையில் அமைதியாக, அகிம்சை வழியல் போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தாலும் அந்த மக்களின் குரல்களை நசுக்குகின்ற நிலமைதான் இன்று இருக்கின்றது.
இந்த நிலமையில்தான் ஜ.நா வின் மனித உரிமைப் பேரவை வருகின்ற மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக விவாதிக்க இருக்கின்றது. இங்கு நடைபெறுவதெல்லாம் வெறுமனே ஒரு மனித உரிமை மீறல் அல்ல. ஒரு தேசத்தினுடை இருப்பு அழிக்கப்படுகின்ற போழுது, இந்த தேசத்தினுடைய நியாயத்தினை உலகத்திற்கு சுட்டிக்காட்ட முயட்சிகள் எடுக்கின்ற ஒவ்வொரு முறையும், அந்தக் குரலை நசுக்குவது, தேசத்தினுடைய இருப்பை நசுக்குவது அந்த தேசத்தின் இருப்பை நசுக்குவதற்கு சமனானது.
அந்தப் பின்னணியை சரியாக விளங்கிக் கொண்டு, சர்வதேச சமூகம் ஆக்கபூர்வமான தீர்மானத்தினை நிறைவேற்ற வேண்டும். நிச்சையமாக உள்ளகரீதியாக பாதிக்கப்பட்டு தமிழர் தாயகத்தில் வாழுகின்ற மக்களுக்கு நீதி நியாயம் கிடைக்கப்பெறுவதில்லை. இதை உணர்ந்து சர்வதேச சமூகம் நேரடியாக தமிழருடைய பிரச்சினைக்கு தீர்வுகாணக்கூடிய வகையிலே ஆக்கபூர்வமான சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். அதனைச் சர்வதேசம் செய்யாவிடின், தமிழர் தாயகத்தில் நடைபெற்ற, நடக்கும் பிரச்சினைகளை தெரிந்து கொண்டும் சர்வதேசம் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்காவிடின், தமிழர்களின் இந்த நிலமைகளுக்கு சர்வதேசமும் துணைபோவதாகத்தான் தமிழர் கருதவேண்டிவரும் என்றார்.
No comments
Post a Comment