Latest News

February 16, 2014

தடைகளை தகர்த்து சரித்திரம் படைப்போம்! -ஈழதேசம் நிர்வாகம்.
by admin - 0

ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்’ என்ற உயரிய இலட்சிய தாகத்துடன் இணைய உலகில் களமாடிவரும் ஈழதேசம் இணையத்தளம் ஒன்பதாவது முறையாக முடக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக நடைபெற்ற தொடர் சதி முயற்சியால் எமது இணையம் தற்போது முற்றிலும் இயங்க முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளது. எட்டாவது முயற்சியிலும் தமது எண்ணத்தை ஈடேற்ற முடியாத எதிரிகள் மீண்டும் முருங்கை மரமேறிய வேதாளமாக ஒன்பதாவது தடவையாக முடக்கியுள்ளார்கள்.

சிங்கள இனவெறி அரசிற்கு எதிராக கடும் அழுத்தங்களை ஏற்படுத்தப் போகும் செனீவா அமர்வு ஆரம்பிக்க உள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் பயணத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் இடமின்றி தாயகம், தேசியம் தன்னாட்சி ஆகிய அடிப்படைக் கோட்பாட்டின் வழி நின்று தமிழீழத் தேசியத் தலைவரது வழிகாட்டுதலில் இணையவழிப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் ஈழதேசம் இணையத்தை முடக்கிவிட எதிரிகள் மேற்கொண்ட அதிதீவிர முயற்சியால் தற்போது செயற்பட முடியாமல் முடக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இணையங்கள் தற்காலிகமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படும் தடைகளை சாதகமாக்கி முடக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திவரும் சூழலில் இணையவழி வாசகர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். ஈழதேசம் இணையத்தின் வாசகர்களிற்கு உண்மை எது என்பது தெரியும். இருந்தாலும் தெளிவுபடுத்துவது எமது கடமை.

கீழ்காணும் இணைப்பில் சதிகாரர்களால் முடக்கப்பட்ட இணையத்தளங்களின் முகவரியை இட்டு நீங்களே அறிந்து கொள்ளலாம்.


இந்த சதி முயற்சியில் இருந்து விடுபட்டு இணையவழி போராட்டத்தை தொடர அனைத்துவிதமான முயற்சிகளிலும் ஈழதேசம் இணைய தொழில்நுட்பக் குழுவினர் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். மிக விரைவில் வழமைபோன்று எமது பணி தொடரும் என்பதை அறியத் தருகின்றோம்.

மேலும், எட்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியின் போது ஏற்பட்ட போது உடனடியாக முயற்சித்து மீண்டு வந்தாலும் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பக்கவடிவமைப்பிலேயே தொடர்ந்தும் சேவையினை வழங்கிவந்துள்ளோம். ஈழதேசம் இணையத்தளத்திற்கென பிரத்தியேகமான பக்கவடிவமைப்பினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தருணத்தில்தான் தற்போது ஒன்பதாவது முயற்சியாக முடக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து மீண்டெழுந்து வரும்போது இரட்டிப்பு வேகத்துடன் ஈழதேசம் இணையம் தனது விடுதலைக்கான பாய்ச்சலை மேற்கொள்ளும் என்பதனையும் இணைய வாசகர்களிற்கு பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கினறோம்.

சதி முயற்சியில் முடக்கப்பட்டுள்ள இணையத்தை மீட்டெடுப்பது புதிய பக்கவடிவமைப்பில் கொண்டு வருவது என்ற இரட்டைக் களத்தில் நாம் தீவரமாக பணியாற்றிவருகின்றோம். கூடிய விரைவில் புதுப்பொலிவுடனும் புதிய உற்சாகத்துடனும் ஈழதேசம் இணையம் இணைய உலகில் விடுதலைக் பயணத்தை ஆரம்பிக்கும் என்பதை நாம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


‘ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்’

நிர்வாகத்தினர்.

ஈழதேசம் இணையம்.
« PREV
NEXT »

No comments