Latest News

February 01, 2014

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட 28 எலும்புக்கூடுகள் வைத்தியசாலையில்
by admin - 0

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட  எலும்புக்கூடுகளில் 05 எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார்  மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமையும் எடுத்துச்செல்லப்பட்டது. 

மன்னார் நீதவானின் உத்தரவுக்கு அமைய  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டதொரு  இடத்தில் இதுவரையில் 28  மனித எலும்புக்கூடுகள் வைக்கப்பட்டுள்ளன. 

மேற்படி புதைகுழியிலிருந்து  55 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. 

மேலும், மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அநுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையில் 19 தடவையாக இன்று வெள்ளிக்கிழமையும் மனித புதைகுழி தோண்டப்பட்டது. இதன்போது  எவ்வித மனித எலும்புக்கூடுகளும் மீட்கப்படவில்லை.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மேற்படி புதைகுழி தோண்டப்படவுள்ளது. 

கடந்த டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி குறித்த பகுதியில்  குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் கிடங்கு தோண்டியபோது அதில் மனித எச்சங்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. 
« PREV
NEXT »

No comments