பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவும், இணைந்து எதிர்வரும் 31ம் திகதி பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்திலும், பெப்ரவரி 1ம் திகதி, UCL பல்கலைகழகத்தின் Kennedy Lecture Theatre லும், தமிழர் தாயக பிரதேசங்களில், இனவாத சிங்கள அரசுகளால் கடந்த 60 வருடங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு தொடர்பாக மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளனர், இவ் மாநாட்டில் பல சர்வதேச ஊடகங்கள் கலந்து கொள்ளவிருப்பதால், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பையும், நில அபகரிப்பையும் சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட பெரிதும் ஏதுவாகவிருக்கும். இம்மாநாட்டில் இலங்கை, இந்தியா, மலேசியா, தென் ஆபிரிக்கா மற்றும் பல நாடுகளில் இருந்து அறிவுஜீவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு கருத்தாய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். இம்மாநாட்டை தொடர்ந்து, பெப்ரவரி 2ம் திகதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஹரோவில் உள்ள Zoroastrian Centre இல் பொதுக்கூட்டமும், தமிழர் கலை விழாவும் பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பொதுக் கூட்டத்தில், மலேசியாவின் Penang மாநில துணை முதல்வர் திரு.ராமசாமி , மாவை சேனாதிராஜா, அரியநேந்திரன், சுரேஷ் பிரமேச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட இலங்கை, இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள். இதில் பிரித்தானிய வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக் கட்டணம்: 10 பவுன்கள்
இடம்:Zoroastrian Centre ,Harrow
442-452 Alexandra Avenue,
South Harrow
Harrow,
HA2 9TL
442-452 Alexandra Avenue,
South Harrow
Harrow,
HA2 9TL
No comments
Post a Comment