இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற மெய்வன்மைப்போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டு இருப்பதன்மூலமே நவீன காலத்துக்கு ஏற்றாற் போல் எங்களை நாங்கள் தயார் படுத்திக்கொள்ளாம். அப்போது தான் சமூகத்தில் பிறர் மதிக்கத்தக்க வகையில் வாழலாம்.
கல்வியைக் கற்கும்போது நல் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியாக இருந்தால்தான் அந்தக் கல்வியால் பயன் கிடைக்கும். மாறாக ஒழுக்கமில்லாத கல்வியாக இருந்தால் கற்றதனால் ஒரு பயனும் கிடைக்காமல் போய்விடும். தமிழர்களாகிய நாங்கள் அரசியல் விழிப்புணர்வுள்ள கல்வியைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் எமது எதிர்காலத்தைச் சிறந்ததாக மாற்றமுடியும்.
இதனை பின்பற்றாமல் விடுவோமாக இருந்தால் எமது நிலங்கள், இருப்புக்கள் என்பன இல்லா மல் போகும் நிலை உருவாகும். தற்போதைய காலகட்டத்தில் எமது நிலங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டு வருவதனை நாளாந்தம் காண்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே கெவுளியாமடு பிரதேசத்தில் அரசால் நன்கு திட்டமிட்ட முறையில் நாளுக்கு நாள் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.-என்றார்.
No comments
Post a Comment