Latest News

February 04, 2014

இலங்கை தொடர்பில் அமெரிக்க - பிரித்தானிய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை
by Unknown - 0

இலங்கை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் கலந்துரையாடியுள்ளன.
தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், நேற்று லண்டனில் பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரியை சந்தித்து இது குறித்து உரையாடியுள்ளார்.
இதனையடுத்து தமது சந்திப்பு தொடர்பில் ஸ்வைரி, தனது ருவிற்றர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
தாமும் பிஸ்வாலும் இலங்கையின் மனித உரிமைகள் விடயம் மற்றும் ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை என்பவை தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஸ்வைரி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜெனீவாவுக்கு செல்லவுள்ள பிஸ்வால் அங்கு இந்தியா உள்ளிடட நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
« PREV
NEXT »

No comments