இலங்கையின் பிரபல பாடசாலைகளின் அதிபர்களை இராணுவ பிரிகேடியர்களாகவும் கேர்ணல்களாகவும் மாற்றியதுடன் நிறுத்தாமல், பிரபல நபர்களுக்கு இராணுவப் பட்டங்களை வழங்கி முழு நாட்டையும் இராணுவமயப்படுத்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் கீழ், பிரபல கிரிக்கெட் வீரர்கள், பிரபல பாடகர்கள், பிரபல நடிகர்கள், நடிகைகள் என பிரபல நபர்களுக்கு இராணுவத்தின் பதவிப் பெயர்களை வழங்கப்பட உள்ளதுடன் அந்த பதவிகளை வழங்கும் நபர்களின் பட்டியலை பாதுகாப்புச் செயலாளர் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த திட்டத்தை நாங்கள் இராணுவம் என்று பெயரிட வேண்டும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார். பாதுகாப்புச் செயலாளருக்கு நெருக்கமான திலித் ஜயவீர என்பவரே இந்த பெயரை வைப்பதற்கான யோசனை வழங்கியுள்ளார்.
விளம்பர நிறுவன வர்த்தகரான திலித் ஜயவீர, தற்போது பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் பாதுகாப்புச் செயலாளரை முட்டாளாக்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இந்த திட்டத்தின் கீழ் அண்மையில் உலக சாதனை படைத்த இலங்கையின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார, கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் அணி தலைவர் மஹலே ஜயவர்தன ஆகியோருக்கு பிரிகேடியர் தர பதவிப் பட்டம் வழங்கப்பட உள்ளது.
அத்துடன் பாத்தியா மற்றும் சந்தோஸ் ஆகியோருக்கு பிரிகேடியர் பதவி நிலைப் பட்டங்களை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பரிந்துரை செய்துள்ளார்.
அதேவேளை பாதுகாப்புச் செயலாளருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு நெருக்கமான நடிகைகளான ருவாந்தி மங்களா, ஜிஞ்சர் மற்றும் கயேஷா கப்டன் பதவி நிலைப்பட்டங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
No comments
Post a Comment