Latest News

January 27, 2014

பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடில் லண்டனில் நிலஅபகரிப்புக்கெதிரான மாபெரும் மாநாடு
by Unknown - 0

பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடில் லண்டனில் நிலஅபகரிப்புக்கெதிரானமாபெரும் மாநாடு
நன்றி ஈழம்ரஞ்சன்

ஈழத்தில் இலங்கை அரசால் திட்டமிட்டு தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து பாரிய மாநாடு ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) நடத்தவுள்ளது. இதற்காக மலேசியாவில் உள்ள பினாங்கு மாநில முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி அவர்களும் லண்டன் வரவுள்ளார். பிரித்தானியாவில் உள்ள "தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு" இந்த மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. லண்டனில் உள்ள ஈழத் தமிழர்களின் விவகாரங்களை கவனிக்க ஆழும் கட்சி, எதிர் கட்சி மற்றும் மூன்றாவது கட்சியில் உள்ள பல எம்.பீக்கள் இணைந்து ஒரு குழுவை ஆரம்பித்தார்கள். அவர்களையே நாம் "தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு" என்று அழைக்கிறோம்.

தற்போது இவர்களின் அனுசரணையோடு தான் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இதனூடாக தமிழர்களின் நிலங்கள் பறிபோவது பற்றி மேற்குலகத்திற்கு எடுத்துரைக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள், அரசியல்வாதிகள் , புத்திஜீவிகள், மற்றும் தமிழ் பிரமுகர்கள் இம் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழர்கள் நிலம் பறிபோவது தொடர்பாக பேசவுள்ளார்கள். இதனூடாக ஈழத் தமிழர்களின் நிலைப்பாட்டை, நாம் பிரித்தானிய அரசுக்கு எடுத்துச் சொல்ல இது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

இதேவேளை நடைபெறவுள்ள ஜெனீவா மாநாட்டிற்கு ஈழத் தமிழர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதனையும் இது தெளிவாக விளக்கவுள்ளது. மேற்குலகம் தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு அரசியல் காய்நகர்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால் தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதனை தமிழர்களே நிர்ணயிக்க வேண்டும். இதில் ஈழத் தமிழர்கள் எப்போதும் உறுதியாக உள்ளார்கள் என்பதனை எடுத்துக்காட்ட இதுவும் ஒரு சந்தர்பமாக அமையவுள்ளது.
« PREV
NEXT »

No comments