Latest News

January 14, 2014

நோர்வே நாட்டில் கல்வியில் சிறந்து விளங்கும் இனத்தில் 3ம் இடத்தில் தமிழினம்
by admin - 0

நோர்வேயின் மிகப் பெரிய பத்திரிகைகளில் ஒன்றான ( afoenposten ) சமீபத்தில் நோர்வேயில் பிறந்த வேற்று இனக்குழுக்களின்கல்வித் தரம் எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது.
அதில் சில இனங்கள் சொந்த இன மக்களை விட சிறந்து விளங்குவதாக கண்டறியப்பட்டது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 24 குழந்தைகள் 47 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். அடுத்து சீனாவை சேர்ந்த 52 குழந்தைகள் 45.5 குழந்தைகள் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். ஈழத் தமிழ் குழந்தைகள் 245 பேர் 42.2 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள். இந்தியா 97 குழந்தைகளுடன் 40.8 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்தில் வந்தது.

இதில் குறிப்பிடத்தக்கவிடயம் என்னவென்றால் தமிழ்ப் பிள்ளைகளின் எண்ணிக்கை. அனைத்து தமிழ்ப் பிள்ளைகளும் நன்றாக படிப்பதை எடுத்துக் காட்டுகிறது.
இது போல இவர்கள் படிப்பதற்கு தமிழர்களின் குடும்ப அமைப்பும், நோர்வேயில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் பங்களிப்பும் மிக முக்கியமான காரணங்கள் என்பதை இந்தப் பத்திரிகை குறிப்பிட்டு இருக்கிறது.
« PREV
NEXT »

No comments