Latest News

January 14, 2014

வடக்கு மாகாணசபை செயலிழந்து வருகின்றது! சுரேஸ் அதிர்ச்சித் தகவல்!
by admin - 0

ஓன்றுமே செய்ய முடியாத அவல நிலையிலையே வடக்கு மாகாண சபை உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தின் நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது வடக்கு மகாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும் இங்கு ஐனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டிலும் உலக அரங்கிலும் ஐனாதிபதி தெரிவித்து வருகின்றார்.
அவ்வாறு இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைப்பதாகவும் தெரிவிக்கின்றார். அதே போன்றே நாட்டில் மூன்றில் இரண்டு பெரும்பானிமையுடன் தான் ஆட்சி அமைத்து வருவதாகவும் கூறுகின்றார்.
அவ்வாறாயின் தான் எவ்வாறு நாட்டில் செயற்படுகின்றாரோ அதே போன்று வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் செயற்படுவதற்கு விட வேண்டும். ஆனால் மாறாக அதிகாரங்கள் அனைத்தையும் வைத்துக் கொண்டு மகாண சபையை இயங்கச் சொன்னால் எவ்வாறு இயங்குவது என்றும் கேள்வி எழுப்பினார்.
மாகாண சபைக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. அத்தோடு அதிகாரங்களையும் வழங்காது இழுத்தடித்து வருகின்றது. மேலும் தொடர்ந்து தானே இங்கும் ஆட்சி செய்கின்றதான நினைப்புடனேயே மாகாண சபை ஆட்சியமைத்திருக்கின்ற நான்கு மாதங்களிலும் அவ்வாறே செயயற்படுகின்றது.
இந்த நிலைமைகளினால் நிர்வாகத்தை நடத்த முடியாத அதே வேளையில் பெரும் எதிர்பார்ப்புர்டன் வாக்களித்த மக்களுக்கும் எதனையும் செய்ய முடியாமல் இருக்கின்றது. ஐனாதிபதி ஒத்துழைக்காது விட்டால் இந்த மாகாண சபையினால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த நிலை இப்படியே தொடருமாயின் சர்வதேசத்திடமே நாம் தொடர்ந்தும் முறையிட வேண்டுமென்றார்.
ஆகவே வடக்கு மாகாண சபை சிறந்த முறையில் செயற்படுவதற்கு மாகாண சபையின் அதிகாரங்களை வழங்கி ஐனாதிபதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனை ஐனாதிபதி சிந்தித்துச் செயற்பட வேண்டும். இல்லாவிடின் மாகாண சபை ஒரு போதும் இயங்க முடியாதென்றும் இதனை சர்வதேச சமுகத்திடமே முறையிட வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments