தனது வீடியோ கமராவின் ஒளிநாடாவை முள்ளியவளையில் வைத்து பொலிஸாரால் கடந்த 12 ஆம் திகதி அபகரித்து சென்றுவிட்டதாக வடமாகாணசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளியவளை கணுக்கேணி கிழக்கில் இலவச கண்ணாடி வழங்குவதற்கான பரிசோதனைகளை வவுனியாவிலுள்ள வைத்தியசாலை மற்றும் கொழும்பிலுள்ள விஷன் கெயாருடன் இணைந்து கடந்த ஞாயிறன்று மேற்கொண்டிருந்தோம். அதில் 150 பேர் பங்குபற்றியதுடன் 93 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம்.
இதேவேளை, அழிந்துபோகின்ற எமது கலைகளை கட்டிக்காக்கும் நோக்கில் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தில் கலைநிகழ்ச்சியொன்றையும் அதே தினத்தில் நடத்தினோம். இந்த கலை நிகழ்வில் புனர்வாழ்வு பெற்றவர்களும் சிறுவர்களும் பங்குபற்றினர்.
புனர்வாழ்வு பெற்றவர்களில் இரண்டு கண்களையும் இழந்த ஒருவரும் இரண்டு கால்களை இழந்த மற்றுமொருவரும் தங்களுடைய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், அங்கு வந்த பொலிஸார் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கோரினர். அதற்கு நான் இணங்காது நிகழ்ச்சியை தொடந்து நடத்தினேன். எனினும் அங்குவந்த இராணுவத்தினர் நிகழ்ச்சியை நடத்தவிடாது குழப்பங்களை விளைவித்துகொண்டிருந்தனர். இறுதியில் எனது வீடியோ கமராவின் ஒளிநாடாவை பொலிஸாரால் பறித்தெடுத்து சென்றுவிட்டனர். அது இன்னும் என்னிடம் கையளிக்கப்படவில்லை என்றார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தொடர்புகேட்டபோது,
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் ஆவணப்படம் தயாரிக்க முயன்றதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்தன அதனையடுத்தே நாம் அந்த வீடியோ கமராவின் ஒளிநாடாவை கைப்பற்றினோம் என்றார்.

No comments
Post a Comment