Latest News

January 02, 2014

எனக்கு ஆபத்து! இலங்கை அதிகாரிகள் எச்சரித்தனர்! ராதிகா எம்.பி
by admin - 0

கைது செய்யப் போவதாக இலங்கை அதிகாரிகள் தம்மை எச்சரித்தனர் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியான நெருக்குதல்களை சந்திக்க நேரிட்டது.
கைது செய்து நாடு கடத்த நேரிடலாம் என இலங்கை அதிகாரிகள் எச்சரித்தனர்.
நான் சிறுவயதில் வாழ்ந்து வந்த இடத்தை பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தேன்.
கனேடியர்கள் என்ற ரீதியில் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்.
அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டதனைப் போன்றே, எனக்கும் அதே நிலைமை ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுத்தனர்.
மனித உரிமைப் பாதுகாப்பு இலகுவான விடயமல்ல எனினும், கருத்துச் சுதந்திரம் மற்றும் திறந்த பேச்சுவார்த்தைகளின் மூலமாக மனித உரிமைகளை பாதுகாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments