Latest News

January 17, 2014

கோதபாயவின் DOC – DIDஇல் யாழ் தமிழ் ஊடகவியலாளர்கள்! அதிற்சியில் ஊடக உலகம்..
by admin - 0

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விசேட புலனாய்வு பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் புலனாய்வாளர்களாக அரசுக்கு சார்பான ஊடகவியலாளர் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சகோதர சிங்கள இணையத்தளம் ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இதில் யாழ்;ப்பாணத்தை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் இணையத்தளம் ஒன்றிற்கு செய்தியாளராக இருக்கும் என்ற பெண்ணும் சிறிலங்கா புலனாய்வாளர்களுக்கு தகவல்களை சேர்த்து கொடுக்கும் நபராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் மக்களுக்காக செயற்படும் பொது அமைப்புக்களை கண்காணித்து அரசுக்கு தகவல் கொடுக்கும் வேலைகளில் இவரைப்போன்ற யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் சிலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புலனாய்வாளர்கள் குழுவில் இணையத்தளம் ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படும் ஊடக அமைப்பொன்றின் முன்னாள் செயற்பாட்டாளரும் இருப்பதாக சகோதர சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் செயற்படும் இந்த ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதுடன், எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகளின் திட்டங்கள், அவர்களின் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் அதற்கு யார் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தகவல்களை தினமும் தேடி வருகின்றனர்.
இந்த ஊடகவியலாளர்கள் திரட்டும் புலனாய்வு தகவல்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய புலனாய்வு பிரிவான டி.ஓ.சி என்ற விசேட பிரிவுக்கு வழங்கப்படும்.
இந்த புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் ஹெந்தா வித்தாரண நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு திரட்டும் புலனாய்வு தகவல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக அரச புலனாய்வு பிரிவு, இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் வழங்கப்படும் என்றும் அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments