Latest News

January 05, 2014

நியூயோர்க் பொலிஸ் திணைக்கள காரை பிரித்தானிய வீதியில் செலுத்தியவர் கைது
by admin - 0

அமெரிக்காவின் நியூயோர்க் பொலிஸ் திணைக்கள காரொன்றை பிரித்தானிய வீதியில் செலுத்திச் சென்ற
நபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். நியூயோர்க் பொலிஸார் பயன்படுத்தும் கார்கள்
விசேட அடையாளங்கள், இலச்சினைகள்
பொறிக்கப்பட்டிருக்கும். ஹொலிவூட்
திரைப்படங்கள் மூலம் உலகெங்கும்
பிரசித்திபெற்றவை இக்கார்கள்.
இத்தகைய காரொன்றை லண்டனுக்கு அருகிலுள்ள கில்ட்போர்ட் நகர வீதியில் ஒருவர் செலுத்திச்
செல்வதைக் கண்டு பலர் திகைப்புற்றறனர்.
நியூயோர்க் பொலிஸாரின் கார்
எவ்வாறு லண்டனுக்கு வந்தது என பலரும்
ஆச்சரியமடைந்தனர். உணவு விடுதியொன்றுக்கு அருகில் அக்கார்
நிறுத்தப்பட்டவுடன் பிரித்தானிய பொலிஸார் காரை திறந்து சோதனையிட்டனர். அக்காருக்குள்
போலி துப்பாக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து ஆயுதமேந்திய பொhலிஸாரும் வரழைக்கப்பட்டு அக்காரின் சாரதி கைது செய்யப்பட்டார். அவர்
பொலிஸ் உத்தியோகஸ்தர் போன்று ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். மேற்படி திரைப்படங்களில் பயன்படுத்தப்படுத்துவதற்காக லண்டனுக்கு கொண்டுசெல்லப்பட்ட காராக
இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments