யுத்தத்தின் போது பாலியல் வன்முறை இடம்பெறுவதனைத் தடுக்கும் வகையிலான தமது பூர்வாங்க நடவடிக்கைக்கு இலங்கை ஆதரவு வழங்குமா என்பது குறித்து அந்நாட்டின் பதிலை தாம் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் கேள்விக்கு வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் வில்லியம் ஹேக் பதிலளிக்கையில், இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் தங்களின் பிரத்தியேகமான பூர்வாங்க செயற்பாடு குறித்து கலந்துரையாடியதாகவும், இதற்கு அவர்கள் ஆதரவளிப்பார்களா என்பது குறித்த அவர்களின் பதிலுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை மீதான அவரின் முழுமையான அறிக்கை பின்வருமாறு:
இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் நாம் பங்கேற்காது விட்டிருந்தால் எம்மால் இலங்கை விவகாரம் குறித்த எமது தரப்பிலான நியாயத்தை எடுத்துரைக்க முடியாமல் போயிருந்திருக்குமென்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இலங்கையில் நான் தங்கியிருந்த போது இலங்கை ஊடகங்களில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில், பரந்தளவில் இடம்பிடித்திருந்த யுத்தத்தில் பாலியல் வன்முறையைத்தடுத்தல் குறித்த பகிரங்க உரையொன்றையும் நான் ஆற்றியிருந்தேன். இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்களின் கவனத்தை நாம் ஈர்த்துள்ளோமென்றே நான் கருதுகின்றேன்.
இந்தவிடயம் குறித்து நான் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியிருந்ததுடன், இதற்கு அவர்கள் ஆதரவளிப்பார்களா என்பது குறித்த அவர்களின் பதிலை எதிர்பார்த்த வண்ணமுள்ளோம். இது குறித்து தீர்மானிப்பதென்பது இலங்கை அரசுக்கு கடினமான காரியமாக இருக்குமென்பதான அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன. எங்களால் அதனை மட்டுமே செய்ய முடியும்.
எவ்வாறாயினும், கெளரவ உறுப்பினரின் ஆலோசனையை நாம் பின்பற்றியிருந்தால் அதனை எம்மால் செய்ய முடியாமல் போயிருந்திருக்கும். இலங்கை விவகாரம் குறித்து பேச்சளவில் எம்மால் செய்ய முடியாமல் போயிருந்ததை அங்கு விஜயம் செய்திருந்தன் மூலம் நாம் சாதித்துள்ளோம். நிலைமையை நான் தவறான விதத்தில் எடுத்துரைப்பதாக கெளரவ உறுப்பினர் கூறுகின்றார். ஆயினும், இலங்கைக்கு நாம் விஜயம் மேற்கொள்ளக் கூடாதென எதிர்க்கட்சியினர் கூறுவார்களென நாம் புரிந்துவைத்திருந்தோம்.
நாம் இலங்கைக்கு போயிருந்திருக்காவிடின், எம்மால் பொதுநலவாயம் குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பையோ, பாலியல் வன்முறை குறித்து இலங்கை அரசிடம் கேள்வியைழுப்பும் உரையொன்றையோ, இலங்கை ஊடகங்களை நேரில் சந்தித்து உரையாட ேவா எம்மால் முடியாமல் போயிருந்திருக்கும். எனவே, எதிரணி உறுப்பினர்களால் தங்கள் தலைகளை ஆட்டவோ அல்லது அவற்றை மணலில் புதைக்கவோ முடியும். ஆயினும், விளைவோ ஒரே மாதிரியானதுதான். இலங்கையில் இந்த விவகாரத்தைப் பெரிய அளவில் தட்டிக் கேட்பதில் நாம் சரியானதையே செய்துள்ளோம் என்பது எனக்கு ஆறுதல் அளிக்கின்றதென்பதே அதற்கான விடையாகும் என அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment