Latest News

December 13, 2013

லண்டனில் சிங்கள பொலிஸ் பரபரப்பு வாக்குமூலம் !
by admin - 0

லண்டனில் தஞ்சமடைந்துள்ள சிங்கள பொலிஸ் அதிகாரி ஒருவர் பல திடுக்கிடும் தகவல்களை நீதிமன்றத்தில் கூறியுள்ளார். கேட்டால் பதை பதைக்கும் இச் சம்பவங்கள் வடக்கிலும் தெற்கிலும் இடம்பெற்றுள்ளது. இதனை முன் நின்று நடத்திய பொலிஸ் அதிகாரியே தற்போது லண்டனில் தஞ்சமடைந்து , அகதி அந்தஸ்த்து கோரியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இவர் அப்படி என்ன தான் கூறியுள்ளார் ? இதோ அதிர்வின் வாசகர்களுக்காக விசேட செய்தி ! (இவரது பெயர் சட்டச் சிக்கல் காரணமாக வெளியிடப்படவில்லை) இருப்பினும் இவரை தற்சயம் நாம் "ஆஷ்" என்று அழைப்போம். இவர் இலங்கையில் பொலிஸ் அதிகாரியாக இருந்தவேளை பல கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்பாவி தமிழர்களை, புலிகள் இயக்க உறுப்பினர்களை, மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் உள்ளவர்களையே "ஆஷ்" வெள்ளை வேனில் கடத்தியுள்ளார். இதற்காக குறித்த வெள்ளைவேன்னில் சில மாற்றங்களை செய்துவைத்துள்ளார்கள். உற்புறத்தில் சாரதியின் இருக்கைக்கு பக்கமாக, உள்ள இருக்கைக்கு கீழ்,(கால்கள் வைக்கும் இடத்தின் கீழ்) சிறிய இடம் ஒன்றை ஏற்படுத்தி, தாம் கடத்தும் நபரின் கைகளையும் கண்களையும் கட்டி இவர் அந்தக் குழிக்குள் தள்ளுவார். பின்னர் கொண்டு சென்று, சேர்க்கவேண்டிய இடத்தில் அவரை சேர்ப்பாராம் என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார். குறித்த இந்த பொலிஸ் அதிகாரி ஆஷ் உடன், மேலும் சில பொலிசார், ஒரு பாதாள உலககோஷ்டி நபர் கூட இருந்திருக்கிறார்கள். இவர்கள்போல குழு குழுவாக தான் பல பொலிஸ் பிரிவுகள் இருந்துள்ளது. அவர்களே அட்களை வெள்ளைவேனில் கடத்துவது வழக்கம் என்று இவர் மேலும் தெரிவித்துள்ளார். யாரைக் கடத்தவேண்டும் என்றசெய்தி பாதாள உலக கோஷ்டி நபர் ஊடாகவே முதலில் தமக்கு கிடைக்கும் என்று கூறும் பொலிஸ் அதிகாரி, பின்னர் தாம் புறப்பட்டுச் சென்று ஆட்கள் இல்லாத வீடுகளில் தங்கி இருப்போம் என்றும், அங்கே தமக்கு தேவையான ஆயுதங்கள் வைக்கப்பட்டு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இலக்க தகடு அற்ற வாகனம் ஒன்று தமக்கு மேலிடத்தில் (கொழும்பில்) இருந்து அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நீங்கள் கடத்தும் தமிழ் இளைஞர்களை யாரிம் கையளிப்பீர்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. நான் கடத்திவைத்திருக்கும், இளைஞர்களை அழைத்துச் செல்ல சில தனிப்பட்ட நபர்கள் வருவார்கள், அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது, சிலவேளைகளில் நான் கடத்திய நபர்களை பொலிஸ் நிலையத்தில் கூட ஒப்படைத்தது உண்டு என்கிறார் இந்த பொலிஸ் அதிகாரி. தான் கடத்தி வைத்திருக்கும் நபரை எங்கே ஒப்படைப்பது என்பதற்கான கட்டளை கூட இறுதி நேரத்தில் தான் வருமாம். பின்னரே நாம் அவரை ஓப்படைப்போம் என்கிறார் இவர். தற்போது தன்னை இலங்கை அரசு தற்போது தேடிவருவதாகவும், தன்னை கொலைசெய்ய அவர்கள் முற்படுவதாகவும் இப் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும் இவருக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்று தெரியவில்லை. ஆட்களை கடத்தி , சித்திரவதை செய்து பின்னர் அரசிடம் ஒப்படைக்கும் நபருக்கு எவ்வாறு பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்த்து கொடுக்கமுடியும் என்று நீதிமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் தன்னை இலங்கைக்கு நாடு கடத்தினால், தான் நிச்சயம் கொல்லப்படுவேன் என்று அப்பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார். குறித்த இந்த பொலிஸ் அதிகாரிக்கு நிலந்தர பொலிஸ் நிலையம் என்று ஒன்றுமே இல்லையாம். இவர்களைப்போன்றவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள வெறும் வீடுகளில் தான் தங்கியிருக்கவேண்டுமாம். மேலிடத்தில் இருந்து வரும் கட்டளையை நிறைவேற்றவேண்டும். இதுவே இவர்களின் வாழ்கையாக உள்ளது. பிரித்தானியாவில் இவருக்கு அசேலம் கிடைக்கிறதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் பிரித்தானிய அரசுக்கும், நீதிபதிகளுக்கும் இலங்கையில் என்ன நடக்கிறது என்பது பற்றி இப்போதாவது நன்றாகத் தெரிந்திருக்கும். ஈழத் தமிழர்களின் நிலை புரிந்திருக்கும்.

Athirvu
« PREV
NEXT »

No comments