சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பலை வலுப்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மஹிந்த அரசாங்கம் மக்களுக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தற்போது பிரதேச சபைகளில், ஆளும் தரப்பினால் முன் வைக்கும் வரவு செலவுத்திட்ட அறிக்கைகள் தோல்வி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கயந்த கருணாதிலக்கவின் கருத்து வெளியாகிறது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு முதுகெலும்பு கிடையாது. பிரதேச சபை உறுப்பினர்கள் தைரியமாக செயற்பட்டு வருகின்றனர்.
வரவு செலவுத் திட்டம் ஒர் வெற்றுப் பேப்பராகவே சிறிலங்கா மக்கள் கருதுகின்றனர்.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதனை விடவும் அரசாங்கம் நாய்களுக்கு நலன்களை வழங்குவதில் நாட்டம் காட்டி வருகிறது.
அரசாங்கம் கெரில்லா பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர்.
மக்கள் பொதுப்போக்குவரத்தில் செல்வதற்கு தடுமாறி வரும் தருணத்தில், அரசாங்கம் இரவு கார்பந்தயங்களை நடாத்தி வருகிறது.
அரசாங்கம் தம்மை ஏமாற்றி வருவதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.” என கயந்த மேலும் குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் தற்போதைய அரசாங்கம் ஊழல் நிறைந்தது எனக் கூறிய, பிரதமர் யிங்லக் சினவேத்திரா தலைமையிலான அரசாங்கத்தை கலைக்குமாறு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment