Latest News

December 27, 2013

நயன்தாரா- சிம்பு படத்தில் சூடான முத்தக் காட்சி
by admin - 0

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய முதல் படம் சென்னை 600028. இப்படத்தினை இயக்குநர் சமுத்திரகனி தான் முத லில் இயக்குவதாக இருந்ததாம். சமுத்திரகனி சற்றுத் தயக்கம் காட்டவே, தயாரிப்பாளர் எஸ். பி. பி. சரண், படத்திற்கு கதை எழுதிய வெங்கட்பிரபுவையே இயக்கச் சொல்லிவிட்டாராம். யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றாத வெங்கட்பிரபு இயக்குநர் ஆனது இப்படித் தானாம்.
* 'நான் ஈ'க்குப் பிறகு அதன் இயக்குநர் ராஜமவுலிக்கு தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழிலும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இவர் தற்போது இயக்கிவரும் 'மகாபலி' படத்தில் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். கதையில் மாற்றம் செய்ததால் மற்றொரு நாயகி தேவைப்பட்டார். அதற்காகப் பலரிடமும் பேசி வந்த தயாரிப்புத் தரப்பினர், இறுதியில் தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்போது ஒரே படத்தில் அனுஷ்காவும், தமன்னாவும் நடிக்கிறார்கள். ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தான்.
* தமிழ் திரைப்படத் தயாரிப்பா ளர்கள் சங்கமும், இயக்குநர்கள் சங்கமும் அண்மைக்காலமாக அடிக்கடி சந்திப்பு நடத்தி பல பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து வருகின் றன. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘தமிழ்நாடு திரைப்பட கூட்டமைப்பு‘ என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கி, அதன் மூலம் ஏராளமான சிறிய பட்ஜெட் படங்களைத் தடங்கலின்றி வெளியி டச் செய்து, அவர்களுக்குரிய லாபத்தினை பெற்றுத் தரும் வகையிலான திட்டங்களை அறிவிக்க உள்ளார்க ளாம்.
* 'இன்னார்க்கு இன்னாரென்று' என்ற படத் தின் மூலம் அறிமுகமாகும் நடிகை அஞ்சனாவைப் பார்த்து, "சற்று சதை போட்டிருக்கிறாய். அதைக் குறைத்துக்கொண்டு, ஸ்லிம் ஆக இருந்தால் நீயும் முன்னணி நடிகையாக வலம் வருவாய். வரவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை" என்று பொன்னாடை போர்த்தி ஆசி கூறினார் இயக்குநர் ஆர். கே. செல்வமணி. வாழ்த்த வந்த இடத்தில் இவருக்கு ஏன் இந்த வேலை? என்று கேட்கவேண்டியவர்கள் கேட்டால் நன்றாக இருக்கும்.* உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் முன்னணி நடிகரான ஜெக்கி சான், தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படம் 'பொலீஸ் ஸ்டோரி 2013', உலகம் முழுவதும் ஓரிரு தினங்களில் வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பு வரும் பொங்கலன்று வெளியிடப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. இதனால் தல மற்றும் இளைய தளபதியின் ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனராம். இந்தப் படத்தில் ஜெக்கி சான் ஒரு பாடலையும் பாடி யிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
* கணிதமேதை இராமானுஜம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, கேம்பர் சினிமா என்ற பட நிறுவனம் 'ராமானுஜன்' என்ற பெயரில் ஒரு திரைப்படமாகத் தயாரித்து வருகிறது. நடிகர் அபினய் ராமானுஜமாக நடித்திருக்கிறார். இப்படத்தினை ஞான ராஜசேகரன் இயக்குகிறார்.
* நான் சிவப்பு மனிதன் என்ற படத்திற்காக சென்னைக்கு அருகே குறுகிய காலகட்டத்திற்குள் தேவாலயம் போன்றதொரு அரங்கத்தை நிர்மாணித்து அனைவரையும் பாராட்டையும் பெற்றாராம் கலை இயக்குநர் ஜெக்கி. இவர் ஏற்கனவே ஆடுகளம், பருத்திவீரன் போன்ற வெற்றிப்படங்களில் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* 'என்றென்றும் புன்னகை' படத்திற்காக இயக்குநர் அஹமதுவின் வேண் டுகோளுக்கிணங்கி ஏறத்தாழ நாற்பத்தைந்து நாட்களுக்கும் மேல் கோல்ஷீட் வாரி வழங்கி தன்னுடைய நட்பை பலப்படுத்தினாராம் சந்தானம். சந்தானம் ஒரு படத்தில் நடிக்க அதிக நாட்கள் ஒதுக் கியது இந்த படத்திற்குத்தானாம்.
* 'நம்ம கிராமம்' என்ற பெயரில் உருவான புதிய திரைப்படம் பல விருதுகளை வென்றிருக்கிறது என்பதெல்லாம் பழைய செய்தி. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மது அம்பாட், தன்னுடைய சம்பளத்தைப் பற்றி எதுவும் கூறாமல், இயக்குநர் கொடுத்த குறைந்த தொகையையும் மனமுவந்து பெற்றுக்கொண்டாராம் என்பது தான் புதிய செய்தி.* பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு.நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் பெயரி டப் படாத படத்தில், நயன்தாரா படு கவர்ச்சி யாக உடை அணிந்து ஒரு காட்சியில் நடித்தி ருக்கிறாராம். அந்தக் காட் சியில் சிம்புவைக் கட்டிப் பிடித்து முத்தமும் கொடுத்திருக் கிறாராம்
« PREV
NEXT »

No comments