யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் அவர்களை வீட்டுக் காவலில் (House Arrested) தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.
யாழ்.நகரில் அவர் தங்கியிருந்த டில்கோ விடுதிக்குச் சென்றிருந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ராதிகா தொடர்பான தகவல்களை கேட்டறிந்துள்ளனர்.
ராதிகா எதிர்வரும் முன்றாம் திகதி வரையில் விடுதியில் அறை ஒப்பந்தம் செய்துள்ளபோதிலும் அவர் அந்த நேரம் விடுதியில் இல்லாமையினால் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் மற்றும் குடிவரவு அதிகாரிகள் நீண்டநேரம் விடுதி வளாகத்திற்குள் நின்றிருந்ததுடன், வீதி முழுவதும் அதிகளவிலான படைப்புலனாய்வாளர்களின் நடமாட்டமும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வலி வடக்கு மக்களைச் சந்திக்க சென்றிருந்த ராதிகா தங்கியிருந்த விடுதிக்கு மாலை 7 மணியளவில் திரும்பியதும் அவரை யாழ் இராணுவப் புலனாய்வாளர்களின் தலைமை அதிகாரி ரணவீர இரு பெண் புலனாய்வாளர்களோடு ராதிகாவை அவர் தங்கியிருக்கும் விடுதி அறையில் இருந்து வெளியேறக் கூடாது என ஆணையிட்டதோடு, அவரை வெளியிலிருந்து யாரும் சந்திக்கவும் முடியாது என விடுதியில் அடைத்து வைத்துள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments
Post a Comment