உலகெங்கும் அறியப்பட்டவரும் இந்தியாவில் இயற்கை வேளாண் துறையில் புரட்சியை ஏற்படுத்திவரும் இயற்கை வேளாண் விஞ்ஞானியும் ஆகிய “கோ.நம்மாழ்வார்” ஜயா அவர்கள் இலங்கையின் வடமாகாண சபையின் கௌரவ விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் அவர்களின் வேண்டுதலை ஏற்று 2014 தை மாதம் 18 ம் திகதி வடமாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உழவர் தின விழாவுக்கு பிரதம விருந்தினராக வருவதற்கு ஒப்புதல் அளித்திருந்த நிலையில் மறைந்துள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் வடமாகாண விவசாய அமைச்சால் மேற்கொள்ளப்பட்டு அவருக்கான அழைப்புக் கடிதம் அனுப்பி
வைக்கப்பட்ட நிலையில் இன்று அவ் அழைப்பிதழ் நம்மாழ்வார் ஐயாவுக்கு கிடைக்கும் நிலையில், ஐயா நாளையில் இருந்து இங்கு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுவார் என்று நாம் எல்லோரும் நம்பியிருந்த வேளையில் எமது அழைப்பிதழ் ஐயாவின் கைகளுக்கு கிடைக்க முன்னரே ஐயா இவ் உலகை விட்டு நேற்று மாலை (30.12.2013) உயிர் துறந்து விட்டார்.மிகவும் வேதனை மிக்க இந்த துயர நிகழ்வினால் கெளரவ வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் ஜயா அவர்களும், வடமாகாண மக்களும் மிகவும் மனவேதனை அடைவதுடன் அமரர் நம்மாழ்வார் ஜயாவுக்கு தமது கண்ணீர்க் காணிக்கையை செலுத்தி ஜயாவின் ஆன்மா இறைவன் அடி சேர பிரார்த்தி்க்கின்றோம்.நம்மாழ்வார் ஐயாவுக்கு வடமாகாண சபையின் கௌரவ விவசாய அமைச்சர் மற்றும் வடமாகாண மக்களின் துயர் பதிவுகளை யாழில் இருந்து க. புவனேந்திரன் எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஐயாவின் புகழுடல் இந்தியாவின் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் காலை 9 மணி முதல் வைக்கப்பட்டு அதன் பிறகு கரூர் மாவட்டம் கடவூரில் உள்ள வானகத்தில் இறுதி நிகழ்வுகள் இடம்பெறும்.
No comments
Post a Comment