Latest News

December 24, 2013

ரசிகர்களுக்கு ‘ஜில்லா’ பரிசு
by admin - 0

ஜில்லா படம் குறித்த தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் இமான். வரிசையாக ஹிட் பாடல்களை கொடுத்து வருபவர் டி.இமான். இவரது இசை அமைப்பில் பொங்கலுக்கு வரவிருக்கும் படம் விஜய் நடித்துள்ள ’ஜில்லா’. இந்தப் படத்தின் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘ஜில்லா’ படம் பற்றிய தகவல் ஒன்றினை தனது மைக்ரோ ப்ளாகில் வெளியிட்டிருக்கிறார் இமான். அதில் ஜில்லா படத்தின் முதல் பாதி தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாகவும், அதுபோலவே ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் விதமாக ஒரு ‘ட்ரீட்’ ஆக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
« PREV
NEXT »

No comments