அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் கொழும்பில் உள்ள அமைச்சுக்களுக்கும் தலைமை திணைக்களத்துக்கும் சென்று பதவி ஏற்க வேண்டும் என திடீரென அறிவிக்கப்பட்டதால் தாம் பெரும் சிரமங்களையும் மேலதிக செலவினங்களையும் எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் கடமை யாற்றிய பட்டதாரிப் பயிலுநர்களுக்கு அண்மையில் நிரந்தர நியமனங்கள் வழங்க ப்ப ட்டன. இவர்கள் கொழும்புக்கு சென்று அமைச்சுக்களிலும் தலைமைத் திணைக்களத்திலும் கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதால் அவ ர்கள் கொழும்புக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ரீதியில் உள்ள திணைக்களத்தில் இவ்வளவு காலமும் கடமைபுரிந்ததோடு தமது கொடுப்பனவுகளையும் பிரதேச செயலகங்களில் பெற்று வந்தனர்.
இந்நிலையில் நியமனம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்களாக இருப்பதால் கொழும்புக்குச் செல்லும்போது துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை மற்றும் கொழும்பில் இரவு தங்கவேண்டிய நிலை, பதவியேற்க வேண்டிய அமைச்சு மற்றும் திணைக்க ளம், தலைமைக் காரியாலயத்தைக் கண்டுகொ ள்ள அலையவேண்டிய இருப்பதாகவும் இத னால் தமக்கும் பெரும் பணவிரயமும் சிர மும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட ரீதியிலிருந்து கொழும்புக் குச் செல்ல வேண்டி நிலை தொடர்பாக மாவட்டம், பிரதேசங்களுக்குப் பொறுப் பான உயர் அதிகாரிகள் கவனம் செலுத் தாமை தொடர்பாகவும் தங்களது பாதிப் புக்கள் தொடர்பாக அரசியல் தலைவர் களும் கவனம் செலுத்தாமல் இருப்பது தொடர்பாகவும் நியமனம் பெற்ற பட்டதா ரிகளும் அவர்களின் உறவினர்களும் விச னம் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment