அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவரின் அழுத்தங்கள் காரணமாகவே இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து ஜனாதிபதி உட்பட ராஜபக்ஷவினருக்கு அரசாங்கத்திற்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் நடந்து வரும் சந்தர்ப்பத்தில் 9 அமைச்சர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதே இதற்கு காரணம் என பேசப்பட்டு வருகிறது.
இலஞ்சம, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தகவல்களை வெளியிட்ட பின்னரே இந்த விடயம் அம்பலத்திற்கு வந்ததது.
ராஜபக்ஷவினருக்கு எதிரான அமைச்சர்களுக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்குள் பரவலாக பேசப்பட்டது.
ஜனாதிபதியும் அமர்ந்திருந்த மேடையில் உரையாற்றிய அமைச்சர் விஜிதமுனி சொய்சா “உங்களிடம் எனது சொத்து விபரங்கள் தொடர்பான கோவைகள் இருக்குமோ என்பது எனக்கு தெரியாது” என்றார்.
நாடாளுமன்றத்தில் இந்த ஊழல் பிரச்சினை தொடர்பில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் ஒருவர், ஹெல்பிங் அம்பாந்தோட்டை முதல் ராஜபக்ஷவினரின் ஊழல் தொடர்பான கோவைகள் எங்களிடமும் இருப்பதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment